சினிமா செய்திகள்

ஒருவரை உயர்த்த இன்னொருவரை இழிவுபடுத்தாதீர்கள்; ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுத்தேலா அறிவுரை

ஊர்வசி ரவுத்தேலா, சமூக வலைதளங்களில் நடைபெறும் ரசிகர்களின் மோதல்கள் குறித்து தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா, தமிழில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். நடிப்புடன் மட்டுமல்லாமல், பல்வேறு படங்களில் இடம்பெற்ற குத்துப்பாடல்களிலும் தனது நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரசிகர்களின் நடத்தை குறித்து ஊர்வசி கருத்து

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர்வசி ரவுத்தேலா, ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நடைபெறும் நடிகர் ரசிகர்களின் மோதல்கள் குறித்து தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில், "ஒருவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக இன்னொருவரை அவமதிப்பது தவறான செயல். உங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகைக்கு ஆதரவு அளிப்பது நல்லது. ஆனால் அதற்காக வேறு ஒருவரை கேலி செய்வதோ, விமர்சிப்பதோ தேவையில்லை. அதனால் உங்களுக்கு பிடித்த நடிகரை கொண்டாடுங்கள். ஆனால் அதே நேரத்தில் மற்றொரு நடிகரை குறைத்து மதிப்பிட வேண்டாம். இது தேவையற்ற ரசிகர் மோதல்களுக்கு வழிவகுக்கிறது" என்றார்.

'விமர்சிக்காமல் இருப்பதே பெரிய நல்ல செயல்'

தொடர்ந்து பேசிய ஊர்வசி, "ரசிகர்களை மகிழ்விக்கவே நடிகர், நடிகைகள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களை பாராட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தேவையில்லாமல் விமர்சிக்காமல் இருப்பதே ஒரு நல்ல விஷயம். ஒருவரை உயர்த்துவதற்காக இன்னொருவரை காயப்படுத்த வேண்டாம்" என்று அறிவுரை வழங்கினார்.

ஊர்வசி ரவுத்தேலாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரசிகர் மோதல்கள் அடிக்கடி பேசப்படும் சூழலில், அவரது இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.