மலையாள திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நிவின் பாலி. பிரேமம் படம் மூலம் தமிழ் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். நிவின் பாலி, நயன்தாரா இருவரும் ‘டியர் ஸ்டூடெண்ட்ஸ்’ படத்தில் நடித்துள்ளனர். தற்போது ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் நிவின் பாலி - நடிகை ரியா ஷிபு நடிப்பில் வெளியான “சர்வம் மாயா” திரைப்படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள “பிரதிச்சாயா” திரைப்படம் கடந்த 26ம் தேதி வெளியானது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஷர்புதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘பிரதிச்சாயா’ திரைப்படம் 2 வாரத்தில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.