சினிமா செய்திகள்

'ராமாயணா' படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிப்பதற்காக அவருக்கு மொத்தம் ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு பாகத்திற்கும் தலா ரூ.6 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ராமாயணா'

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'ராமாயணா'. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ந்தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு?

இந்நிலையில், இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிப்பதற்காக அவருக்கு மொத்தம் ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு பாகத்திற்கும் தலா ரூ.6 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது சாய் பல்லவியின் திரைப்பயணத்திலேயே அதிகபட்ச சம்பளம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவரது சம்பளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT