சென்னை,
நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள ஓம் திரைப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்தன.
இந்தப் படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’ மற்றும் ஃபா... ஃபா.. மூன்று பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ஓம் திரைப்படம் நவ. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளில் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஓம் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஓம் படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவலை தயரிப்பு நிறுவனம் வெளியாகியுள்ளது. அதன்படி, திரைப்படம் வெளியான 2 நாட்களில் மொத்தம் 75 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. நாளை 100 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.