சினிமா செய்திகள்

4 நாட்களில் “பேட்ரியாட்” திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மம்முட்டி - மோகன்லால் நடித்துள்ள “பேட்ரியாட்” படம் உலகளவில் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத் திரையுலகத்தின் முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் சுமார் 29 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியானது. கேரளாவில் மட்டும் முதல் நாள் வசூலாக 8 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளதாகத் தகவல். இதன் மூலம் மலையாளப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த இரண்டாவது படமாக அமைந்துள்ளது. முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ படம் இருக்கிறது. படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து மோகன்லாலுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘அனைவருக்கும் நன்றி’ என மம்முட்டி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘பேட்ரியாட்’ படம் 4 நாள்களில் உலகளவில் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.