சினிமா செய்திகள்

5 நாட்களில் “ராஜா சிவாஜி” திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் ரூ. 57 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் மூலம் முதன்முறையாக மராத்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். இந்த படத்தில் சாம்ராஜ் சாகாஜி போஸ்லே என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தில் அபிஷேக் ஒரு போர்வீரரின் உடையை அணிந்துகொண்டு, போர்க்களத்தில் கர்ஜித்தபடியும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் தோன்றுகிறார். ஜியோ ஸ்டுடியோஸ், மும்பை பிலிம் கம்பெனி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக் இயக்கி ஹீரோவாக நடித்த ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வரலாற்று கதைக்களத்தில் அமைந்திருந்த ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 57 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.