சினிமா செய்திகள்

‘ராமாயணா’ பட நிகழ்ச்சியில் சாய் பல்லவி அணிந்திருந்த புடவையின் விலை தெரியுமா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ராமாயணா படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் சாய் பல்லவி கலந்து கொண்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவி அணிந்திருந்த ரூ.1.59 லட்சம் மதிப்புள்ள பிங்க் நிற புடவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ராமாயணா’

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். சன்னி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, அக்டோபர் 27-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்படத்தின் உலகளாவிய பிரீமியர் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘ராமாயணா’ படக்குழுவினர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் படக்குழுவைச் சேர்ந்த முக்கியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் வருகை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ரூ.1.59 லட்சம் புடவையில் சாய் பல்லவி

பிரீமியர் நிகழ்ச்சியில் சாய் பல்லவி அணிந்திருந்த பாரம்பரிய உடை அலங்காரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர், ஹாட் பிங்க் நிறத்திலான ஆர்கன்சா புடவையை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆடை வடிவமைப்பாளர் அனுஷ்ரீ ரெட்டி வடிவமைத்த இந்தப் புடவையின் விலை ரூ.1,59,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஜர்தோசி வேலைப்பாடுகள், கைவினையால் அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் மலர் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் பாரம்பரிய தோற்றம், பிரீமியர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

SCROLL FOR NEXT