சென்னை,
எனக்கு 'தி ஒன்' என்று பட்டம் தந்திருக்கிறார்கள். அது வேண்டுமா? அதை நான் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவேண்டுமா? என்று ரசிகர்களிடமே கேட்கிறேன்.
'கருப்பு', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வெற்றியை தொடர்ந்து, இந்த ஆண்டில் சூர்யாவின் 3-வது திரைப்படமாக 'சீன்' படம் வருகிற 6-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த படத்தின் 'டிரெய்லர்' வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசும்போது, “இந்த ஆண்டு எனக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. 3 படங்கள் வெளியாகவுள்ளன. ஏற்கனவே 'மாயாவி', 'கஜினி', 'ஆறு' ஆகிய படங்கள் ஒரே ஆண்டில் வெளியானது. ஒவ்வொரு முறையும் என் படங்கள் ரசிகர்களால் எளிதில் கணிக்க முடியாத வகையில் அமையவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்திலும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது.
எனக்கு 'தி ஒன்' என்று பட்டம் தந்திருக்கிறார்கள். அது வேண்டுமா? அதை நான் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவேண்டுமா? என்று ரசிகர்களிடமே கேட்கிறேன். ஏனெனில் நான் பட்டங்களை விரும்புவது கிடையாது. ரசிகர்களுக்காக மட்டுமே அதனை ஏற்கிறேன். 'நேருக்கு நேர்' படம் என்னுடைய முதல் படம். அதற்கு தேவா இசையமைத்தார். 'அவள் வருவாளா...' என்று அவர் போட்ட பாடல் தான் இன்றுவரை என்னை சினிமாவில் அழைத்துச் செல்கிறது. அவரை என்றென்றும் என்னால் மறக்க முடியாது. அதேவேளை 'சீன்' திரைப்படத்துக்காக தனது 'ஓம்' படத்தின் ரிலீசை தள்ளிவைத்த தனுசுக்கும் நன்றி”,என்றார்.