நடிகைகள் விஷயத்தில் அப்படி இருப்பதில்லை. தெரியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டாலும், அதை பெரிதுபடுத்தி விமர்சிக்கிறார்கள். இதனால் நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். என ஊர்வசி ரவுத்தேலா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுத்தேலா. கவர்ச்சி நடனங்களிலும் கவனம் ஈர்த்து வரும் இவர், தமிழில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக, குத்துப்பாடல்களில் இவரது நடனம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழில் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஊர்வசி ரவுத்தேலா எதிர்பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நடிகைகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஊர்வசி ரவுத்தேலா கூறியதாவது: “சினிமாவில் நடிகர்கள் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் நடிகைகள் விஷயத்தில் அப்படி இருப்பதில்லை. தெரியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டாலும், அதை பெரிதுபடுத்தி விமர்சிக்கிறார்கள். இதனால் நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
நடிகர்களைவிட நடிகைகள்தான் விமர்சனங்களுக்கு அதிகம் பயந்து வாழும் நிலை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை கொண்டாட வேண்டும் என்று கூட நான் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்காமல் இருந்தாலே போதும்” என்றார். நடிகைகள் மீதான விமர்சனங்கள் குறித்த ஊர்வசி ரவுத்தேலாவின் இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.