தனுஷ் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அப்படி ஒரு முடிவெடுத்தாலும், சினிமாவை கைவிடாதீர்கள் என சாய்பல்லவி கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘ஓ.ம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான ‘அலாக்கா லூவா’ மற்றும் ‘வீழா வீரா’ பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் செம்மரக்கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி படம் வெளியாகிறது. இதனால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக உள்ளார். 2024-ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த அவர், தான் கையெழுத்திட்ட படங்களை முடித்துவிட்டு, முழு மக்கள் பணியில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். அதுபோல ஜனநாயகனுக்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் தனுஷும் இதுபோல செய்யக்கூடாது என நடிகை சாய்பல்லவி கோரிக்கை விடுத்துள்ளார். தனுஷ் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அப்படி ஒரு முடிவெடுத்தாலும், சினிமாவை கைவிடாதீர்கள் என சாய்பல்லவி கேட்டுக் கொண்டுள்ளார்.
‘ஓம்’ படத்தின் நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசிய நடிகை சாய்பல்லவி., “நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இப்போது விஜய் சார் அரசியல் சென்றுவிட்டதால், நடிப்பதில்லை. ஆனால் நீங்கள் தொடர்ந்து நடிப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், தொடர்ந்து நடிக்கவேண்டும். உங்களை நாங்கள் மிஸ் செய்வோம்” என தெரிவித்தார்.