சினிமா செய்திகள்

பட்ஜெட்டை பற்றி பேசாதீங்க..படத்தை பற்றி பேசுங்கள்: சல்மான்கான் கோபம்

ராமாயணம் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் கிராபிக்ஸ் குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சல்மான் கானின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

மும்பை,

ராமர், ராவணன், சீதை ஆகிய கதாபாத்திரங்களைப் பற்றியும்தான் பேச வேண்டும். ரூ.4,000 கோடி பட்ஜெட், விஷுவல் எபெக்ட்ஸ் (கிராபிக்ஸ்) குறித்து மட்டுமே தொடர்ந்து பேசுவது சரியானது அல்ல” என்றார்.

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ராமாயணம்'. இதில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும், நடிகர் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.4,000 கோடி என கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதால், அது குறித்த விவாதமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சல்மான் கான், 'ராமாயணம்' திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனது அடுத்த படமான 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவரிடம், ராமாயணம் திரைப்படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சல்மான் கான், "ராமாயணம் பற்றி பேசும்போது அதன் கதையைப் பற்றியும், ராமர், ராவணன், சீதை ஆகிய கதாபாத்திரங்களைப் பற்றியும்தான் பேச வேண்டும். ரூ.4,000 கோடி பட்ஜெட், விஷுவல் எபெக்ட்ஸ் (கிராபிக்ஸ்) குறித்து மட்டுமே தொடர்ந்து பேசுவது சரியானது அல்ல” என்றார்.

ராமாயணம் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் கிராபிக்ஸ் குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சல்மான் கானின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT