சினிமா செய்திகள்

‘ஒடிசி’யை விட 100 மடங்கு சிறந்த படம் ‘டோரதி’ - இயக்குநர் மிஷ்கின்

‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

சென்னை,

‘ஒடிசி’யை விட 100 மடங்கு சிறந்த படம் ‘டோரதி’ என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

‘டோரதி’

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1990-களின் பின்னணியில்...

1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’,படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

“100 மடங்கு சிறந்த படம்”

இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியது கவனம் பெற்றுள்ளது.

அவர் பேசுகையில், “கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒடிசி’ படத்தை நான் பார்த்துள்ளேன். அந்தப் படம் ரூ.15,000 கோடி வசூலித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அதைவிட 100 மடங்கு சிறந்த படம் ‘டோரதி’ என்று தெரிவித்தார். மிஷ்கினின் இந்தப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT