மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, டப்பிங் செய்யும் புகைப்படத்தை மம்முட்டி பகிர்ந்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.