சினிமா செய்திகள்

சுந்தர் சியின் 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம்

சுந்தர் சியின் 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டு உள்ளார்.

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்ப விழா, பத்து நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் சுந்தர் .சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். ரெட் கார்ப்பெட்டில் ஸ்ருதிஹாசன் முதன் முறையாக நடந்து வந்தார். அது பற்றி உலக மீடியாக்கள் பலவற்றிற்கும் அவர் பேட்டி எல்லாம் கொடுத்தார்.

ஆனால், இப்போது அவரைப் படத்திலிருந்து நீக்கியுள்ளனர். இது குறித்து சற்று முன், தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனுடன் 'சங்கமித்ரா' படத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

'சங்கமித்ரா' படத்திற்காக லண்டனில் ஸ்ருதிஹாசன், வாள் வீச்சு, சண்டைப் பயிற்சி எல்லாம் பெற்று வந்தார். படத்திலிருந்து அவர் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதன் காரணம் என்ன என்று அறிவிக்கப்படவில்லை.


Due to unavoidable circumstances, we are unable to proceed working with Shruti Haasan in Sangamithra.

Posted by Sri Thenandal Films on Monday, May 29, 2017