சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் 41வது படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

துல்கர் சல்மானின் 41-வது படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். துல்கரின் ‘லக்கி பாஸ்கர்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, மலையாளத்தில் ‘ஐயம் கேம்’ என்கிற படத்திலும் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் தெலுங்கு படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT