சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் “ஏஓடி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

பவன் சடிநேனி இயக்கும் ‘ஏஓடி’ படத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி நடிக்கின்றனர்.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி' படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரது நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸி

தற்போது துல்கர் சல்மான், 'ஐயம் கேம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் புதிய படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இதில் நாயகியாக சாத்விகா வீரவல்லி நடிக்கிறார். சாத்விகாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படமும் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இன்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியாகியுள்ளது. பாலாஜி வேணுகோபால் எழுதிய இப்பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார்.

SCROLL FOR NEXT