சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் நடித்த “ஐ அம் கேம்” படத்தின் 2வது பாடல் வெளியானது

துல்கர் சல்மான் நடித்த ‘ஐ அம் கேம்’ படம் செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘லூசர்’ பாடல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளனர்.

பான் இந்தியா திரைப்படம்

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து ‘ஐ அம் கேம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ஜாம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

ரிலீஸ் தேதி மாற்றம்

‘ஐ அம் கேம்’ திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 3-ம் தேதி ‘ஐ அம் கேம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முதல் பாடல் வெளியீடு

இந்த நிலையில், ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ சமீபத்தில் வெளியானது.

2வது பாடல் வெளியானது

இந்நிலையில், ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘லூசர்’ பாடல் வெளியாகியுள்ளது.