சினிமா செய்திகள்

'துரந்தர் 2' -பாக்ஸ் ஆபிஸ் பிளாஸ்ட்.. 7 நாட்களில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை

இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும், வசூலில் சாதனை படைத்தும் வருகிறது.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடையதாகும்.

வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், வெளியான ஏழு நாட்களிலேயே ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் உலகளவில் ரூ.1006.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வேகமாக முன்னேறி வரும் இந்த படம், அடுத்த சில நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT