சென்னை,
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் (மார்ச் 19) வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமா முன்னணி இயக்குனரான ஷங்கர் துரந்தர் 2 படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "துரந்தர் 2 நிஜ சம்பவங்களும் கதாபாத்திரங்களும் புனைவுடன் இவ்வளவு சிறப்பாகக் கலந்திருந்ததைப் பார்ப்பது ஒரு பிரமிக்க வைக்கும் அனுபவமாக இருந்தது. படம் முழுவதும் நான் அதில் மூழ்கிப் போனேன், படத்தின் நீளத்தை என்னால் உணரவே முடியவில்லை.
ஆதித்ய தார் அவர்களின் துணிச்சலான மற்றும் கணிக்க முடியாத கலைத்திறனுக்கு, குறிப்பாக வழக்கத்திற்கு மாறான நீளமுள்ள ஷாட்கள், காட்சிகள் மற்றும் படத்திற்காகப் பெரிய பாராட்டுக்கள். ரன்வீர் சிங் அவர்களின் வழக்கத்திற்கு மாறான நடிப்பும் அற்புதமான திரைப் பிரசன்னமும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நடிகர் மாதவன் அவர்களின் நடிப்பு, புதிய மற்றும் பொருத்தமான முகபாவனைகளுடன் நுணுக்கமாக இருந்தது. நடிகர்கள் தேர்வு, படத்தை இன்னும் யதார்த்தமாக உணர வைத்தது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களை மிஞ்சியுள்ளனர். இது நிச்சயமாக இந்திய சினிமாவில் ஒரு வரலாற்றுத் தருணம்." என்று தெரிவித்துள்ளார்.