ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது துரந்தர் 2 உருவாகியுள்ளது. 3 மணி நேரம் 40 நிமிடங்கள் கொண்ட இந்த படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதே தேதியில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படமும் வெளியாக உள்ளது. கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டாக்ஸிக் படமும் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்டுள்ளது.
இந்த இரண்டு படங்களும் நீளமான திரை நேரத்துடன் வருவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் வெளியாகும் இந்த இரண்டு பிரமாண்ட படங்களில் எது வசூலில் முன்னிலை பெறும் என்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.