சினிமா செய்திகள்

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படம்: ரிலீஸுக்கு முன் ஸ்பெஷல் ஷோ.. ரசிகர்கள் உற்சாகம்

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் சிறப்பு காட்சி இன்று மாலை 5 மணி முதல் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

சென்னை,

ரன்வீர் சிங் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் நாளை (19ந் தேதி) வெளியாகவுள்ளது. முன்னதாக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தை இயக்குனர் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதாவது, டிரெய்லர் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்தது. மேலும் டிக்கெட் முன்பதிவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தும் சாதனை படைத்துள்ளது. பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் தியேட்டர்களில் கண்டு ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் சிறப்பு காட்சி இன்று மாலை 5 மணி முதல் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. மேலும், ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பெஷல் ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.