சினிமா செய்திகள்

’கர’ படப்பிடிப்பின் போது தனுஷை பார்த்து நான்...நடிகை மமிதா பைஜு பகிர்ந்த தகவல்

தனுஷ் மற்றும் மமிதா இணைந்து நடித்துள்ள கர படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

டியூட், ஜனநாயகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருப்பவர் மமிதா பைஜு. தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கர’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்தி ரத்தில் மமிதா பைஜு நடித்துள்ளார்.

போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படம் வருகிற 30-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், கர படம் குறித்து மமிதா பைஜு கூறுகையில், ‘தனுஷ் கடினமாக உழைக்கும் மனிதர்.. தன் வேலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.. நாள் முழுக்க வேலை செய்தாலும் சோர்வாக இருக்கிறது என சொல்லக் கூடாது என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்..

தனது கலைக்கு மிகவும் உண்மையாக இருக்கிறார் தனுஷ்.. ஒரு கதாபாத்திரத்தை அவர் அணுகும் விதம், அதில் அவர் செய்யும் மாற்றங்களும் என்னை மிகவும் கவர்ந்தது.. ஒரு காட்சியில் அவர் நடித்ததை பார்த்து நான் மெய்மறந்து போய் 'வாவ்' என உணர்ந்தேன்... இவ்வாறு மமிதா பைஜு கூறினார்.