சினிமா செய்திகள்

"நட்பை காதலாக மாற்றாதீர்கள்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

எல்விஷ் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜன்னத் சுபைருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

மும்பை,

பாடகர் எல்விஷ் யாதவுடன் காதலில் இருப்பதாக பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை ஜன்னத் சுபைர் விளக்கம் அளித்துள்ளார்.

எல்லை மீறிய செயல்

சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய ஜன்னத் சுபைர், "2 பேருக்கிடையேயான நட்பும் பாண்டிங்கும் மக்களுக்கு பிடிச்சிருந்தால், உடனே ஒரு ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அது இயல்புதான். ஆனால், அதை தாண்டி எங்களை காதலிப்பதாக இணைத்து பேசுவது எல்லை மீறிய செயல்" என்று கூறி காதல் வதந்திகளை மறுத்துள்ளார்.

முன்னரும் காதல் கிசுகிசு

இதற்கு முன்பு, பிரபல சமூக வலைதள பிரபலமான மிஸ்டர் பைசு (பைசல் ஷேக்) உடன் ஜன்னத் சுபைர் காதலில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.