சினிமா செய்திகள்

"ரசியுங்கள்.. கொண்டாடுங்கள்.." ஆனால் விமர்சனம் செய்யாதீர்கள்- நடிகை திஷா பதானி

ரசிகர்களின் விமர்சனங்களுக்கு திஷா பதானி காட்டம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் திஷா பதானி, சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தில் நடித்தார். தற்போது 'அவராபன்-2', 'வெல்கம் டூ ஜங்கிள்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எந்த விழாக்களுக்கு சென்றாலும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் உடைகளை அணிந்து கலக்குவது திஷா பதானியின் வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் அவர் அணிந்த உடை பெரும் சர்ச்சையானது. 'தாராளம்' காட்டிய அந்த உடையை சரிசெய்ய அவரும் படாதபாடு பட்டுப்போனார்.

இதற்கிடையில் இப்படிப்பட்ட உடையை ஏன் அணிந்து வர வேண்டும். பின்னர் ஏன் அவதிப்பட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்தனர். பலரும் திஷா பதானியின் கவர்ச்சி உடையை விமர்சித்தனர்.

ரசிகர்களின் விமர்சனங்களுக்கு திஷா பதானி காட்டம் தெரிவித்துள்ளார். 'நடிகைகளை ரசியுங்கள், கொண்டாடுங்கள். ஆனால் உடைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். இங்கு கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் யாரும் வரவில்லை' என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT