சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி... தொடங்கியது 'டேர்டெவில்' படப்பிடிப்பு

இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

ஐதராபாத்,

நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படமான 'டேர்டெவில்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

மீண்டும் இணைந்த அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். 'டேர்டெவில்' (Daredevil) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஜித்தின் 64-வது திரைப்படமாகும். இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

பூஜையில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஷாலினி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர்கள் உன்னி முகுந்தன், பார்த்திபன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையின்போது ஸ்ரீலீலாவின் காட்சியுடன் படத்தின் முதல் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் ஷாலினி முதல் கிளாப் கொடுத்தார்.

இசையமைக்கும் அனிருத்

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் ஏற்கனவே 'விவேகம்', 'வேதாளம்', 'விடாமுயற்சி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ள அனிருத், தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ளார். அஜித் கார் பந்தயப் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், மீண்டும் திரைப்படப் பணிகளுக்குத் திரும்புவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு

இந்த நிலையில், அஜித் குமார் நடிக்கும் 'டேர் டெவில்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளன. இதனால் 'டேர்டெவில்' திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT