சினிமா செய்திகள்

பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படம் உருவாகியுள்ளது.

பகத் பாசில் நடித்த ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாயாஜாலம் கலந்த கதை

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். ‘புஷ்பா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததைத் தொடர்ந்து அவரது நடிப்புக்கு தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார்.

குழந்தை நட்சத்திரத்துடன் பகத் பாசில்

மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் பகத் பாசில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சுவாரஸ்யமான பயணத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘புஷ்பா’ படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.

பகத் பாசில் நடித்த ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரெய்லர் வெளியீடு

இந்நிலையில், பகத் பாசில் நடித்த ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT