சினிமா செய்திகள்

பெண் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பட்ஜெட் கிடைப்பதில்லை; நடிகை ஜோதிகா ஆதங்கம்

நான் சினிமாவை விட்டு விலகி இருந்த 8 ஆண்டுகளில் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்கள் அதிகம் வரவில்லை என்று ஜோதிகா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் சினிமாவை விட்டு விலகி இருந்த 8 ஆண்டுகளில் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்கள் அதிகம் வரவில்லை. அதற்கு பிறகு நான் ‘36 வயதினிலே’ படத்திலும், நயன்தாரா ‘மாயா’ படத்திலும் நடித்தோம். 2 படங்களும் ஓடின. 36 வயதினிலே படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.5 கோடி மட்டுமே. நாங்கள் அந்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு அக்னி பரிட்சையாக இருந்தது. ஏனென்றால் வேறு யாருக்கும் பட்ஜெட் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.