‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராகப் பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
சமீபத்தில் மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் வெளியானது. கடலில் நடைபெறும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சூரியின் நடிப்பும் கவனம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சூரியின் ஏழாவது படமாக உருவாகும் இதற்கு தற்காலிகமாக ‘சூரி 07’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக ராஜிஷா விஜயன் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்களாக நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் காட்சிக்கான கிளாப் அடித்தார்.
படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றிருந்த ‘BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற வாசகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘சூரி 07’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.