சினிமா செய்திகள்

அடுத்த வாரம் தொடங்குகிறது தனுஷின் ‘டி56’ படப்பிடிப்பு

தனுஷ் நடிக்க உள்ள ‘டி56’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் முதல் சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘டி56’ திரைப்படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘டி56’. இப்படத்தை ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கோலாகலமாக நடைபெற்ற பூஜை

‘டி56’ படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் 25-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படம் வெற்றி பெற வேண்டி மாரநாடு கருப்பணசாமிக்கு தனுஷ் 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கினார். மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு 16 கிடாக்கள் வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடக்கம்

இந்த நிலையில், ‘டி56’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் முதல் சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரையை பின்னணியாகக் கொண்ட கதைக்களம் என்பதால், அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT