சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் `ஐ அம் கேம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் காந்தா படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது, ஐ அம் கேம் என்ற படத்தில் நடிக்கிறார். இது துல்கர் சல்மானின் 40வது படமாகும். இந்த படத்தினை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சண்டை இயக்குனராக அன்பறிவு, மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஐ ஆம் கேம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 156 நாட்கள், 11 மாதங்கள், 100 மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.