சினிமா செய்திகள்

சூர்யா 'நோ' சொன்ன படங்கள்... ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பட்டியல்

சூர்யா மறுத்த இந்தப் படங்கள் பின்னர் மற்ற நடிகர்களுக்கு முக்கியமான வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தனது திரைப்பயணத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதே நேரத்தில், பல காரணங்களால் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகளையும் அவர் தவறவிட்டுள்ளார். அந்தப் படங்களில் சில பின்னர் வேறு நடிகர்களிடம் சென்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

துப்பாக்கி:

கஜினி, ஏழாம் அறிவு வெற்றியை தொடர்ந்து, துப்பாக்கித் திரைப்படத்திலும் சூர்யாவை நடிக்க முருகதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை

ஆசை:

வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அவர் மறுத்தார்

துருவநட்சத்திரம்:

துருவநட்சத்திரம் திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் விலகியதால் அதன் பின் விக்ரம் நடித்தார்

இயற்கை:

ஷாம், அருண் விஜய் நடித்த இயற்கை திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அவர் மறுத்துவிட்டார்

ஆடுஜீவிதம்:

பிரத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மறுத்த நிலையில், பிரத்விராஜ் தேர்வானார்

சரியான முடிவா... தவறவிட்ட வாய்ப்புகளா?

ஒரு நடிகரின் திரைப்பயணத்தில் எல்லா கதைகளையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. கால்ஷீட், கதைத் தேர்வு, கதாபாத்திரம் உள்ளிட்ட பல காரணங்களால் சில படங்களை நடிகர்கள் தவிர்க்க நேரிடுகிறது. சூர்யா மறுத்த இந்தப் படங்கள் பின்னர் மற்ற நடிகர்களுக்கு முக்கியமான வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT