சினிமா செய்திகள்

நிவின்பாலி - மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்பா யூனிட்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘பிரேமலு’ பட இயக்குனர் இயக்குனர் கிரிஷ் ஏ.டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை,

‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, பிரேமலு 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் திருப்தி இல்லாததால் அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து கிரிஷ் ஏ.டி ‘பெத்லகேம் குடும்பா யூனிட்’ என்ற மலையாள படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பிரேமலு நாயகி மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் 'பாவனா ஸ்டுடியோஸ்' பேனரில் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, 2026 ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்பா யூனிட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT