சினிமா செய்திகள்

'லைட் வெயிட் பேபி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்கல்ஸ் விக்ரம் தற்போது கே.சி.குரு தயாரித்து, இயக்கும் 'லைட் வெயிட் பேபி' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

காதல், நகைச்சுவை படைப்பாக தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நாயகனாக விக்கல்ஸ் விக்ரம்

'ஸ்டாண்ட் அப்' காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். ஓரிரு படங்களில் தலைகாட்டியுள்ள விக்கல்ஸ் விக்ரம் தற்போது கே.சி.குரு தயாரித்து, இயக்கும் 'லைட் வெயிட் பேபி' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த லேடி பாடி பில்டரான ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு பிரமோத் கோடியான் ஒளிப்பதிவு செய்கிறார்,சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார்.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த நிலையில் காதல், நகைச்சுவை படைப்பாக தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள இந்த வித்தியாசமான போஸ்டர் ரசிகர்களை ஈர்த்தும் வருகிறது.

விரைவில் ரிலீஸ்

படக்குழுவினர் கூறும்போது. “ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ஒரு பிட் னஸ் பிரபலமும் இணையும் இந்த வித்தியாசமான கூட்டணி, படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. பெண் பாடி பில்டருடன் மலரும் இந்த காதல் கதை ரசிகர்களை ஈர்க்கும். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்". என்றனர்.