சினிமா செய்திகள்

"மேரேஜ் ஸ்டோரி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்தப் படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

2024-ஆம் ஆண்டு வெளியான 'அதோமுகம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுனில் தேவ், தற்போது 'மேரேஜ் ஸ்டோரி' என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

புதிய நாயகனாக அறிமுகமாகும் சித்தார்த்

இந்தப் படத்தின் மூலம் சித்தார்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் ஷபானா மற்றும் தீபிகா வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரீல் பெட்டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் ராகவன் இசையமைத்துள்ள நிலையில், தமிழ் அரசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

வெளியான முதல் தோற்றப் போஸ்டர்

இந்நிலையில், 'மேரேஜ் ஸ்டோரி' திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இந்தப் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.