கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா தான் - விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

சந்தீப் கிஷன் நடிப்பில் 'சிக்மா' படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சிய விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக மாறியுள்ளார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தீப் கிஷன் நடிப்பில் 'சிக்மா' என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் "உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், 'சிக்மா' படத்தை பார்த்துவிட்டு தம்பி வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று கூப்பிடுகிறார். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் இந்தியாவிலிருந்து எந்த ஒரு சிறந்த நடிகரை கூட்டி செல்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஜேசன் சஞ்சய், "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா (விஜய்) தான். இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் நடந்த சமயம், விஜய்யின் தோளில் சிறுவனாக அமர்ந்துகொண்டு அந்தப் போட்டியை பார்த்து ரசித்தது உள்ளிட்ட சில அனுபவங்களையும் ஜேசன் சஞ்சய் அப்போது பகிர்ந்து கொண்டார். தனது தந்தை விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.