சினிமா செய்திகள்

'எலக்சன்' படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு

'எலக்சன்' படத்தின் முதல் சிங்கிள் நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'தேர்தல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார்.

'அயோத்தி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் அரசியலை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்து உள்ளது ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலக்சன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இந்த பாடலுக்கு 'தேர்தல் பாடல்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT