நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கான் சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.
மேலும் வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி கவனம் பெற்று வருகிறது. அதாவது, அர்ஜுன் தாஸ் மற்றும் சான் ரோல்டன் காரில் செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினரிடம் கட்டுக்கட்டாக பணம் வைத்து மாட்டிக்கொள்வது போல் புரமோஷன் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதனைச் சார்ந்தும், அதிக பணம் கொண்டு செல்ல வேண்டாம் என்கிற அறிவுரையுடன் தங்கள் படத்திற்கான புரமோஷனையும் செய்துள்ளனர். இது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள கொரியன் பேமிலி பாடலின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி, கொரியன் பேமிலி பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது.