பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சாய் பல்லவி, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது இந்தியில் மெகா படமாக தயாராகி வரும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எந்தக் கிசுகிசுக்களிலும் சிக்காமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் சாய் பல்லவி.
படப்பிடிப்புக்கு நடுவே ஓய்வு நேரத்திலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்பும் சாய் பல்லவி, தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார். ஜப்பானில் பனிகளுக்கு நடுவே ஜாலியாக பொழுதைக் கழிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த சாய் பல்லவியின் பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். “புதுவெள்ளை மழை பொழிகின்றதே” என்ற கேப்ஷனுடனும், “மலரே..” என்ற பிரேமம் படத்தின் பாடல் வரிகளையும் போட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் சாய் பல்லவி ரசிகர்கள்.
சாய் பல்லவி தற்போது நடித்து வரும் ராமாயணம் படம் இரு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகிறது. சாய் பல்லவி சீதையாகவும், ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இந்த படம் சுமார் ₹4000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.