சினிமா செய்திகள்

காதல் உறவில் நட்​புக்​கு முக்​கிய இடம் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஐஸ்வர்யா லட்சுமி நடித்த‘லவ்’ தொடர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

காதல், டேட்​டிங் செயலிகள், உறவு​களில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்ட தற்​காலக் காதல் குறித்த நடிகை ஐஸ்​வர்யா லட்​சுமி தெரி​வித்​துள்ள கருத்​துகள் கவனத்தை ஈர்த்து வரு​கின்​றன.

ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய ரொமாண்டிக் வெப் தொடர் ‘லவ்’. நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.

டேட்டிங் ஆப் பின்னணியில் காதல் கதை

டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரில், ஐஸ்வர்யா லட்சுமி 'தாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் 'மேத்யூ ஜெபராஜ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலில் ‘கெமிஸ்ட்ரி’ முக்கியமா அல்லது ‘காம்பாட்டிபிலிட்டி’ எனப்படும் பொருத்தம் முக்கியமா? என்ற விவாதத்தை மையமாக வைத்து இருவருக்கும் இடையிலான இந்த கதை நகர்கிறது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு

இத்தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடிக்கும் முதல் வெப் தொடராகவும் இதுவாகும்.

நகைச்சுவை - காதல் தொடரான ‘லவ்’ ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘லவ்’ வெப் தொடர் புரமோஷனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்கால காதல்களின் போக்கு குறித்து பேசியுள்ளார்.

“இன்று டேட்டிங் செயலிகள் அதிகம் வந்துவிட்டன. அதன் மூலம் நமக்குத் தேவையான துணைகளைச் சுலபமாகத் தேடவும் முடியும். ஆனால், அதில் சரியான துணையைக் கண்டுபிடிப்பது எளிமையானது அல்ல. தேர்வுகள் அதிகரிக்கும் போது நாம் உண்மையிலேயே குழம்பி விடுகிறோம். கடந்த காலங்களை ஒப்பிட இப்போது அந்தத் தேர்வுகள் அதிகரித்துள்ளதால் சரியான நபர்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இது இக்காலத்தின் சிக்கல்.

காலங்கள் செல்லச் செல்ல காதல் குறித்த என் பார்வைகளும் மாறி வருகின்றன. ஒருவர் முன் முழுமையாக என்னை வெளிப்படுத்துவதும் அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதையும் உணர்ந்தால் அது நல்ல காதல். என் மனதில் உள்ளதைச் சொல்​ல​வும் நான் எப்​படி இருக்​கிறேனோ, அப்​படியே ஏற்​றுக்​கொள்​ளப்​பட​வும் வேண்​டும். சொல்லப்போனால், அப்படி ஒருவர் முன் என்னால் குழந்தையாகவும் இருக்க முடிய வேண்டும்.

காதல் உறவில் நட்​புக்​கு முக்​கிய இடம்

இன்​றைய தலை​முறை உறவு​களை வர்​ணிப்​ப​தற்​காகப் பயன்​படுத்​தப்​படும் புதிய சொற்​களும் குழப்​பத்தை மேலும் கூட்​டு​கின்​றன. காலம் செல்​லச் செல்ல காதல் குறித்த எனது பார்​வை​யும் மாறி​யுள்​ளது. காதல் என்​பது நிம்​ம​தி​யும் பாது​காப்​பும் ஆகும். மற்​றொரு​வர் முன்​னிலை​யில் நான் நானாகவே இருக்க முடிவது முக்​கி​யம். என்னை பொறுத்​தவரை காதல் என்​றால் அது ‘கம்ஃபர்ட்’ தான். ஒரு துணை​யிடம் நான் முதன்​மை​யாக எதிர்​பார்ப்​பது பாது​காப்​பான உணர்​வை. காதல் உறவில் நட்​புக்​கும் மிக முக்​கிய இடமுண்​டு. திரு​மண​மான எனது நண்​பர்​களில் பலர் காதலர்​களாக மாறு​வதற்கு முன்பு நல்ல நண்​பர்​களாக இருந்​தனர்.

திரைப்படங்களில் தீவிர​மான காதல் கதைகளில் நடிக்க விரும்பினாலும் நிஜ வாழ்க்​கை​யில் மகிழ்ச்​சி​யான, எளிமை​யான காதல் கதைகள்தான் எனக்குப் பிடிக்​கும். வலிகள் நிறைந்த காதல் கதைகளைக்​ கண்​டு சோர்​ந்துவிட்​டேன்​” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT