ஐதராபாத்,
நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று (4ந்தேதி) திருமண வரவேற்பு ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி பல முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தனர். இதன் காரணமாக பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், கோலிவுட் திரையுலகில் இருந்து கார்த்தி, சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விரேஷ் ’Virosh' தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, நாக அர்ஜுனா, நாக சைதன்யா, வெங்கடேஷ், இயக்குனர் சுகுமார், ஸ்ரீலீலா, ரவிதேஜா, ராம் சரண் , நானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.