சினிமா செய்திகள்

கிரீடம் வைத்து கியாஸ் சிலிண்டருக்கு வரவேற்பு... சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்

தன்னுடைய வீட்டுக்கு 'கியாஸ்' சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதை சமீரா ரெட்டி கொண்டாடியுள்ளார்.

'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர், சமீரா ரெட்டி. அதனைத்தொடர்ந்து 'அசல்'. 'வெடி', 'வேட்டை' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். முன்னணி நடிகையாக ஜொலிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென காணாமல் போனார்.

பின்னர் திருமணமாகி கணவர், குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். தற்போது 'கியாஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் திண்டாடி வரும் நிலையில், தன்னுடைய வீட்டுக்கு 'கியாஸ்' சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதை சமீரா ரெட்டி கொண்டாடியுள்ளார்.

வீட்டுக்கு வந்த சிலிண்டரை சிவப்பு கம்பளம் விரித்து நகர்த்தி, வீட்டுக்குள் கொண்டு செல்லும் சமீரா ரெட்டி, அந்த சிலிண்டருக்கு கிரீடம் வைத்து, பணத்தால் விசிறி விட்டு, காபி கொடுத்து உபசரிப்பது போன்ற காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.