சினிமா செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் கவுதம் ராம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

மஞ்சிமா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை,

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'கடல்' படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின.

கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. நடிகை மஞ்சிமா மோகனை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் திருமணம் செய்துகொண்டார்

தற்போது கவுதம் ராம் கார்த்திக் சூரியபிரதாப் இயக்கத்தில் ‘ரூட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். தினா ராகவன் இயக்கத்தில் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தில் கவுதம் ராம் கார்த்திக் தற்போது நடித்துவருகிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் நடிகர் கவுதம் ராம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் தம்பதி சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT