விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் திரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாறியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது. இப்படம் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீ-ரிலிஸானது. இப்படம் இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இப்படம் மீண்டும் ரீ ரிலீஸாகிறது. பிப்ரவரி 20ம் தேதி வெளியாகவுள்ளதாக விநியோகிஸ்தர் சக்தி பில்ம் பேக்ட்ரி தங்களது எக்ஸ் பக்கம் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர் நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சாமானியர்களிடம் கார்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் கடன் வசூல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பேசியது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் வரும் 20ம் தேதி ரீ ரிலீஸாகிறது.