சினிமா செய்திகள்

கவர்ச்சிக்கு மாறிய இனியா

நடிகை இனியா கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.

தினத்தந்தி

வாகை சூடவா படத்தினால் பிரபலமானவர் இனியா. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதும் கிடைத்தது. இதில் அவர் பாடிய சரசர சார காற்று வீசும்போது சார பார்த்து பேசும்போது சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுது பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, யுத்தம்செய், மாசானி, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் இனியா நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அவருக்கு படங்கள் குறைந்து விட்டன. கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் இயக்குனர்கள் ஒதுக்குவதாக கிசுகிசுக்கப்பட்டது. பரத்துடன் பொட்டு என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

மார்க்கெட்டை பிடிக்க இனியாவும் கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். அவரது கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இயக்குனர்கள் பார்வை அவர் மீது பட ஆரம்பித்து உள்ளது. முன்பு இந்தி நடிகைகள் போல் ஒல்லியாக இருந்த அவர் இப்போது கொஞ்சம் எடையும் கூடி இருக்கிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்