சினிமா செய்திகள்

சன்னி லியோனுக்கு கோல்டன் விசா...!

சன்னி லியோனுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சஞ்சய்தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், நடிகைகள் ஜோதிகா, திரிஷா, மீரா ஜாஸ்மின், காஜல் அகர்வால், அமலா பால், லட்சுமி ராய், ஆர்த்தி கணேஷ், பாடகி சித்ரா உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. சன்னி லியோன் தமிழில் வடகறி, கொட்டேஷன் கேங், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT