'டெட்பூல் & வோல்வரின்' படத்தை இயக்கிய ஷான் லெவி இயக்க உள்ள புதிய பதிப்பான 'கோஸ்ட் ரைடர்' படம் 2028-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரியான் கோஸ்லிங், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ‘கோஸ்ட் ரைடர்’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் மூலம் பிரபலமான இந்த கதாபாத்திரம் புதிய வடிவில் மீண்டும் திரைக்கு வர உள்ளது. 'டெட்பூல் & வோல்வரின்' படத்தை இயக்கிய ஷான் லெவி, இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை மார்வெல் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ‘கோஸ்ட் ரைடர்’ திரைப்படம் 2028-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
2028-ம் ஆண்டு மார்வெல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது. அந்த ஆண்டில் முதலில் ‘எக்ஸ்-மேன்’ திரைப்படம் மே 5-ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர் ஜூலை 28-ம் தேதி ‘கோஸ்ட் ரைடர்’ வெளியாகிறது. தொடர்ந்து டிசம்பர் 15-ம் தேதி ‘பிளாக் பான்த்தர் 3’ வெளியாக உள்ளது. இதன் மூலம் 2028-ல் மட்டும் மூன்று முக்கிய மார்வெல் படங்கள் வெளியாக உள்ளன.
முன்னதாக 2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் வெளியான 'கோஸ்ட் ரைடர்' திரைப்படங்களில் ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய பதிப்பில் முதன்முறையாக ரயான் கோஸ்லிங் 'கோஸ்ட் ரைடர்' ஆக அறிமுகமாகிறார். இது உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.