சினிமா செய்திகள்

பிரமாண்டமாக நடைபெறும் தனுஷின் `ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

தனுஷ், ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’

‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நவம்பர் 20-ம் தேதி வெளியீடு

‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த படத்தினை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோரின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இசை வெளியீட்டு விழா

இந்த நிலையில், ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை தாம்பரத்தில் சாய் ராம் பொறியியல் கல்லூரியில் (லியோ முத்து அரங்கத்தில்) இன்று நடைபெற உள்ள 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, போலீஸ் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகைக் கட்டுப்பாடுகள் காரணமாக 8,000 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கும், மற்ற மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகளுக்கும் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விழாவில் தன்னைச் சுற்றியுள்ள அரசியல் பேச்சுகளுக்கு நடிகர் தனுஷ் பதிலளிப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT