சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மாளவிகா மஜோஜ் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.ஜிவி பிரகாஷ்

இந்நிலையில், ‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT