கே. விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ படம் டிசம்பர் வெளியாகவுள்ளது.
‘13’ படத்தில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் வெளியிடுகிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு வெளியாக இருக்கிறது.
யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலில் சிக்கிக்கொள்ளும் கதையில் நடித்துள்ளார். கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த 2022ல் டீசர் வெளியானது. சில பிரச்னைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பருக்கு வரும் இந்தப் படத்தினைக் குறித்து இயக்குநர் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், படத்தின் நல்ல மற்றும் தீய சக்திகளின் முகங்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.
மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் இணைந்து நடித்த ‘செல்பி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.