சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் “லக்கி” படத்தின் டிரெய்லர் வெளியானது

ஜி.வி.பிரகாஷின் ‘லக்கி’ படம் நேரடியாக ஜியோஹாட்ஸ்டாரில் வருகிற 20-ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ள படம் ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 20-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி, இளங்கோ குமரவேல், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அந்த டிரெய்லரில் மாயமான நாய் குட்டியான லக்கி அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்ள அதனை கதாநாயகன் மீட்பதே கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளது.